மதுவிலக்கு போலீஸார் விழிப்புணர்வு பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில், ராசிபுரத்தில் மதுவிலக்குப் பிரிவு போலீஸார் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

நாமக்கல் எஸ்பி சக்திகணேசன் உத்தவின் பேரில், மதுவிலக்கு பிரிவு சார்பில் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

ராசிபுரம் பேருந்துநிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு மதுவிலக்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் பூர்ணிமா தலைமை வகித்தார். இதில், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

மேலும், போதைப் பொருட்கள் பற்றிய புகார்கள் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மதுவிலக்குப் பிரிவு எஸ்ஐ தேசிங்கன் மற்றும் மதுவிலக்குப் பிரிவு போலீஸார் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்