பாளை.யில் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் தர்ணா

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா நடத்தப்பட்டது. பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் வி.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் டி. நல்லையா, மாவட்ட துணைச் செயலாளர் கே. அமராவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் பால்ராஜ், மாநிலச் செயலாளர் எஸ். முருகேசன் ஆகியோர் தொடங்கி வைத்து பேசினர்.

மாவட்டச் செயலாளர் எஸ். நெடுஞ்செழியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் என்.ஆறுமுகம், ஏ.ஆதிமூலம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட 21 மாத நிலுவைத் தொகை, அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். அனைத்து வகை ஓய்வூதியர்களுக்கும் குடும்ப நலநிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்