விபத்தில் காயமடைந்த தலைமை காவலர் குடும்பத்தாருக்கு காவல் துறை சார்பில் ரூ.6 லட்சம் நிதியுதவி

By செய்திப்பிரிவு

சாலை விபத்தில் காயமடைந்த தலைமை காவலர் குடும்பத்தா ருக்கு, அவருடன் காவல் பணியில் சேர்ந்த காவலர்கள் ஒன்றிணைந்து ரூ.6 லட்சம் நிதியுதவியை எஸ்.பி., டாக்டர் விஜயகுமார் முன்னிலையில் வழங்கினர்.

திருப்பத்தூர் மாவட்டம் வீட்டு வசதி வாரியம் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியம் (52). இவர், திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நகர காவல் நிலையம் அருகே சாலையில் நடந்துச்சென்றபோது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனம் அவர் மீது மோதியது.

இதில், தலையில் காய மடைந்த சத்தியம் உடனடியாக மீட்கப்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். நீண்ட நாட்களாக சிகிச்சையில் இருந்த சத்தியம் குணமடைந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் வீடு திரும்பினார். இதையடுத்து, அவர் விருப்ப ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், சத்தியம் குடும்பத்தாருக்கு நிதியுதவி வழங்க 1993-ம் ஆண்டு அவருடன் பணியில் சேர்ந்த சக காவலர்கள் முன்வந்தனர். இதைத்தொடர்ந்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் நிதி திரட்டப்பட்டது.

இந்த தொகை போதுமானதாக இல்லை என்பதால், தமிழகம் முழுவதும் 1993-ம் ஆண்டு சக பணியில் சேர்ந்த அனைத்துகாவலர்களிடம் நிதி வசூலிக்கப் பட்டது. இதன் மூலம் கிடைத்த ரூ.4 லட்சத்து 40 ஆயிரத்துடன் ஏற்கெனவே திரட்டப்பட்ட நிதியை சேர்த்து ரூ.6 லட்சத்து 10 ஆயிரத்தைதிருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் முன்னிலையில், சத்தியம் குடும்பத்தாரிடம் சக காவலர்கள் வழங்கினர்.

விபத்தில் காயமடைந்த சத்தியத்துக்கு ராஜலட்சுமி (45) என்ற மனைவியும், ராம் (20) என்ற மகனும், மோகனப்பிரியா (18) என்ற மகளும் உள்ளனர். நிதியுதவி வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் மற்றும் சக காவலர்களுக்கு சத்தியம் குடும்பத்தினர் நன்றி தெரி வித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்