இந்து சமய அறநிலையத் துறையின் மண்டல இணை ஆணையர் அலுவலகம் கடலூர் புதுப்பாளையத்தில் நேற்று திறக்கப்பட்டது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கான செயல்பாட்டு ஆணையினை வழங்கிய தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியது:
தமிழ்நாடு முதல்வர் சட்டபேரவையில் இந்து சமய அறநிலையத்துறையில் 9 இணை ஆணையர் அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும் என அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டத் திற்கான மண்டல இணை ஆணையர் அலுவலகம் கடலூரில் திறக்கப்பட்டுள்ளது.
கடலூர் மண்டலத்தில் 3,113 கோயில்கள் உள்ளன. 29 கோயில்களில் அன்னதானம் திட்டம் நடைபெற்று வருகிறது.
கடலூர் மண்டலத்தில் 595 கோயில்களுக்கு ஒருகாலபூஜை நிதி உதவித்திட்டத்தின் கீழ் பூஜை நடைபெற்று வருகிறது.
ஆதிதிராவிட கோயில்களுக்கு திருப்பணி நிதியுதவி திட்டத்தின் கீழ் 93 கோயில்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ.93 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
கிராமப்புற கோயில் திருப்பணி நிதியுதவி திட்டத்தின் கீழ் 57 கோயில்களுக்கு ரூ.57 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
ஆலய மேம்பாட்டு நிதியிலிருந்து 412 கோயில் பணியாளர்களுக்கு ஊதிய பாக்கி வழங்கப் பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
கடலூர் மண்டல இணை ஆணையர் செல்வராஜ், கடலூர் மாவட்ட உதவி ஆணையர் பரணிதரன், அரியலூர் மாவட்ட உதவி ஆணையர் கிருஷ்ணகுமார் மற்றும் செயல்அலுவலர்கள், ஆய்வாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டத் திற்கான மண்டல இணை ஆணையர் அலுவலகம் கடலூரில் திறக்கப்பட்டுள்ளது.கடலூர் மண்டலத்தில் 3,113 கோயில்கள் உள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago