கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்
தூர்பேட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.50.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 512 அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண் முகம் அடிக்கல் நாட்டினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உளுந்தூர்பேட்டையில் கட்டப்பட உள்ள 512 குடியிருப்புகளுக்கான அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், “தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே இந்த குடியிருப்புகள் அமையப்பட உள்ளதால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஏற்கெனவே தனியார் நிலத்தை விலைக்கு வாங்கி குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான உளுந்தூர்பேட்டையில் விரைவில் திருப்பதி தேவஸ்தானம் மூலம் திருப்பதி பெருமாள் கோவில் கட்டுவதற்கு முதல்வர் அடிக்கல் நாட்டவிருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர் பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் ரா.குமரகுரு, கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் அ.பிரபு, வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்த்தினி, குடிசைமாற்று வாரிய நிர்வாக பொறியாளர்கள் நடராஜன் மற்றும் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago