கார்த்தி சிதம்பரம் எம்பி சிவகங்கையில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் அனைத்து அரசியல் கட்சிகளும் கிரண் பேடியை ஆளுநர் பதவியி லிருந்து மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில் தேர்தல் நடைபெறவுள்ள நேரத்தில் அவரை திடீரென மாற்றியது புரியாத புதிராகஉள்ளது.
இதுபோன்ற மாற்றத் துக்குப் பின் பொதுவாக புதுச் சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பை, தமிழக ஆளுநருக்கு தான் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தெலங் கானா ஆளுநராக இருக்கும் தமிழிசைக்கு கொடுத் துள்ளனர். அவரை நியமித்ததில் உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் காங்கிரஸ் - திமுக கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago