கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், கட்டுப்பாடுகளுடன் ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
ஈரோட்டில் காவல்தெய் வமாக விளங்கும் பெரியமாரியம்மன் வகையறா கோயில்களில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா, தேரோட்டம் விமர்சையாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. கடந்த ஆண்டு குண்டம் திருவிழாவிற்கான பூச்சாட்டுதல் நடந்த நிலையில், கரோனா பரவல் அதிகரிப்பால் விழா ரத்து செய்யப்பட்டது.
அதிகாரிகள் ஆலோசனை
இந்நிலையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடத்துவது தொடர்பாக ஆர்.டி.ஓ. சைபுதீன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, மாநகராட்சி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கட்டுப்பாடுகள் விதிப்பு
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:கரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில், பூச்சாட்டுதல், குண்டம் இறங்குதல், கம்பம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளில் 100-க்கும் குறைவான பக்தர்களே பங்கேற்க வேண்டும். திருவிழாவின்போது குறைவான எண்ணிக்கை யிலேயே கடைகளை அமைக்க வேண்டும். இசைநிகழ்ச்சி, கலைநிகழ்ச்சி, அன்னதானம், சாலையோரக்கடைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது, என்றனர். இதையடுத்து மார்ச் 13-ம் தேதி பூச்சாட்டுதலுடன் பெரியமாரியம்மன் கோயில் வகையறா குண்டம் திருவிழா தொடங்குகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago