திருச்சியில் விவசாயிகள் மறியல்

By செய்திப்பிரிவு

திருச்சியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி யில் 80 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, நேற்று நாடு முழுவதும் 4 மணிநேர ரயில் மறியல் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி, திருச்சி மாவட்டத்தில் பல்வேறு ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங் களுக்குச் செல்லும் அனைத்து வழிகளிலும் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.

இந்நிலையில், தேசிய- தென்னிந் திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், அதன் மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட இருந்ததால் போலீஸார் அய்யாக்கண்ணு வீட்டைச் சுற்றியும் மற்றும் அவரது வீட்டிலிருந்து ரயில் நிலையத்துக்குச் செல்லும் பாதைகளிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, அய்யாக்கண்ணு தலைமையில் ரயில் நிலையம் நோக்கி புறப்பட்ட விவசாயிகளை போலீஸார் கரூர் புறவழிச் சாலைக்கு வரவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, வந்த வழியாகத் திரும்பி, வேறு வழியாகச் சுற்றி ரயில் நிலையத்துக்குச் செல்ல முயன்றபோது, அங்கும் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

போலீஸாரின் பேச்சுவார்த் தையை அடுத்து, மீண்டும் கரூர் புறவழிச் சாலைக்கு வந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உட்பட விவசாயிகள் 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்