35,832 விவசாயிகள் பெற்றரூ.269 கோடி பயிர்க் கடன் ரத்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டத்தில் 35,832 விவசாயிகள் ரூ.268.83 கோடிக்கு கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என ஆட்சியர்  வெங்கட பிரியா தெரி வித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் தெரி வித்துள்ளது:

சாகுபடி செய்த பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பெருத்த சேதத்தைக் கருத்தில் கொண்டு, நிலுவையில் உள்ள பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தன.

இதையடுத்து, தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது.

அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 25,909 ஆண் விவசாயிகள், 9,923 பெண் விவசாயிகள் என மொத்தம் 35,832 விவசாயிகளுக்கு ரூ.268.83 கோடி கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

இதில், பெரம்பலூர் சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட 15,987 ஆண் விவசாயிகள், 4,969 பெண் விவசாயிகள் என மொத்தம் 20,956 விவசாயிகளுக்கு ரூ.164.56 கோடி பயிர்க்கடனும், குன்னம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 9,922 ஆண் விவசாயிகள், 4,954 பெண் விவசாயிகள் என மொத்தம் 14,876 விவசாயிகளுக்கு ரூ.104.26 கோடி பயிர்க் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்