அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு நிகழாண்டில் பறவை கள் வரத்து அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ள கரைவெட்டி பறவைகள் சரணா லயத்தில், வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமையில், தமிழ்ப் பல்கலைக்கழக சுற்றுச் சூழல் மற்றும் மூலிகையியல் துறை மாணவர்கள் மற்றும் பேராசி ரியர்கள் கொண்ட குழுவினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சரணாலயத்தில் உள்ள தொலைநோக்கி உள்ளிட்ட அதிநவீன கருவிகளைக் கொண்டு ஒவ்வொரு பறவையின் வகை, அதன் தாய்நாடு, அதன் நிறம் உள்ளிட்ட பல்வேறு நிலைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.
இதையடுத்து, பறவைகள் வருகை, அவை தங்கும் காலம், இனப்பெருக்கம் குறித்து வனத் துறையிடம் அறிக்கை அளிக்கப்பட உள்ளது. அதனடிப்படை யில், சரணாலயத்தை மேம்படுத்து வதற்கான நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என தெரிகிறது.
இதுகுறித்து கணக்கெடுக்கும் பணி குழுவின் தலைவர் பேராசிரியர் சிவசுப்பிரமணியன் கூறியது: தெற்காசியாவிலேயே அழியும் நிலையிலுள்ள கூழைக்கடா, பாம்புதாரா, அரிவாள்மூக்கன், வண்ணநாரை ஆகிய நான்கு வகை பறவையினங்கள் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் அதிக அளவில் தற்போது காணப் படுகின்றன.
அதேபோல, லடாக் பகுதியில் அதிக அளவில் உள்ள வரித்தலை வாத்து இங்கு அதிகளவில் காணப்படுகிறது. மேலும், வெளிநாடுகளிலிருந்து பல்வேறு வகையான பறவைகள் இந்த சரணாலயத்தில் தற்போது முகாமிட்டுள்ளன. பல்வேறு வகை யான வெளிநாட்டு பறவைகள் கடந்த ஆண்டை விட தற்போது அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்மழையின் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பதால், பறவைகள் பலவும் ஆங்காங்கே தங்கியுள்ளன என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago