கரூர் மாவட்டம் கிருஷ்ணராய புரத்தில் நிகழாண்டு இதுவரை அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப் படாததால், இப் பகுதியில் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாத நிலை ஏற்பட்டு, விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த இப்பகுதி விவசாயிகள் கிருஷ்ணராயபுரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங் கொண்டம் சாலையில் கோவக் குளம் பகுதியில் டிராக்டரில் நெல்லை கொட்டி சாலையின் குறுக்கே நிறுத்தி நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மாயனூர் போலீஸார் அங்கு சென்று விவசாயிகள் மற்றும் நுகர் பொருள் வாணிபக் கழகத்தி னரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago