திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள பேரூர், தண்டலைப் புத்தூர், திருத்தலையூர், ஜெயங் கொண்டம், சுக்காம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் பயன் பெறும் வகையில் பேரூர் பகுதியிலுள்ள அய்யாற்றின் குறுக்கே ரூ.3.65 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை மூலம் தடுப்பணை கட்டும் பணியை முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் அண்மையில் தொடங்கி வைத்தார்.
இதையொட்டி பேரூர் பகுதியிலுள்ள அய்யாற்றில் நடைபெற்ற பூமிபூஜை நிகழ்ச்சியில் மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் கார்த்திகேயன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘அய்யாற்றின் குறுக்கே பேரூர் பகுதியில் 45 மீட்டர் அகலத்தில் 1.20 மீட்டர் உயரத்தில் இந்த தடுப்பணை அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் நிறைவுபெறும் என எதிர்பார்க்கிறோம். இதனால் இப்பகுதியிலுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, சுமார் 454 ஏக்கர் பாசனம் உறுதி செய்யப்படும். இதுதவிர இப்பகுதி கிராம மக்கள் மற்றும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கான குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும்’’ என்றனர்.
இதேபோல, திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகேயுள்ள தெத்தூரில் பாலாற்றின் குறுக்கே ரூ.4 கோடியில் தடுப்பணை கட்டுவதற்கான பணிகளையும் முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் தொடங்கி வைத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago