தமிழக முதல்வர் பழனிசாமி, தென்காசி மாவட்டம் ஆலங்குள த்தில் நேற்று மாலை நடைபெற்ற அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பாவூர் சத்திரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றார். அவர் பேசியதாவது:
தென்காசி மாவட்டம் உரு வாக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றியது. ஜம்புநதி, ராமநதி இணைப்புக் கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இரட்டைக்குளம் முதல் ஊத்துமலை வரை கால்வாய் அமைக்கும் பணி விரைவில் நடைபெறும். தென்காசி தொகுதியில் 3,861 விவசாயி களுக்கு 91 லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சிறப்பான குடிமராமத்து திட்டத்தால் ஏரி, குளங்கள் நிறைந்துள்ளன
அதிமுகவை உடைக்கவும், இந்த ஆட்சியை கவிழ்க்கவும் எத்தனையோ சதி செய்தார்கள். அத்தனை சதிகளும் முறியடிக்கப் பட்டன. ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதலமைச்சராகிவிடலாம் என ஸ்டாலின் பகல் கனவு கண்டு, குறுக்கு வழியில் எத்தனையோ திட்டங்களைப் போட்டார். அந்த திட்டங்களெல்லாம் தவிடுபொடி யாக்கப்பட்டுள்ளது.
திமுகவினர் பதவியில் இருக்கும்போது மக்களை மறந்துவிடுவார்கள். தேர்தல் வரும்போதுதான் மக்களை நினைப்பார்கள். மக்களை ஏமாற்றி வாக்குகளை பறிக்க பார்க்கிறீர்கள். தர்மம், நேர்மை, உண்மைதான் வெல்லும், என்றார்.
இதைத் தொடர்ந்து தென்காசி யில் மகளிர் குழுவின ருடன் கலந்துரையாடினார். இன்று காலை கடையநல்லூரில் நடை பெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்திலும், புளியங்குடியில் மகளிர் குழுவினர் கூட்டத்திலும், பின்னர், சங்கரன்கோவிலில் நடைபெறும் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்திலும் முதல்வர் பங்கேற்று பேசுகிறார்.
சாலையோர கடையில் டீ
பாவூர்சத்திரத்துக்கு செல்லும் வழியில் மகிழ்வண்ணநாதபுரத்தில் சாலையோரத்தில் உள்ள ஒரு கடையில் அமர்ந்து முதல்வர் பழனிசாமி டீ குடித்தார். அமைச்சர் கள் வி.எம்.ராஜலெட்சுமி, ஆர்.பி..உதயகுமார், மாவட்டச் செயலாளர்கள் தச்சை கணேசராஜா, எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago