தாமிரபரணி வெள்ள நீர் கால்வாய் திட்டத்தில் 4-ம் கட்ட பணிகள் வேகமாக நடைபெறுவதாக வள்ளியூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
அவர் பேசியதாவது: ராதாபுரம் தொகுதியில் அரசு ஐ.டி.ஐ. தொடங்கப்பட்டுள்ளது. திசையன் விளையை தலைமையிடமாக கொண்ட தனி தாலுகா அமைத் துள்ளோம்.
தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம், ரூ. 163 கோடி செலவில் ராதாபுரம் கால்வாய் திட்டம், ராதாபுரத்தில் குற்றவியல் நீதிமன்றம், ஆத்தங் கரைபள்ளிவாசலில் இருந்து ரூ.1 கோடியில் கால்வாய் திட்டம், வள்ளியூரை தலைமையிடமாக கொண்ட தனி கல்வி மாவட்டம், கூடங்குளத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஆகிய்வை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
பிரச்சாரத்தின்போது ஆண் குழந்தை ஒன்றுக்கு தர்ஷன் என்றும், பெண் குழந்தைக்கு நிஷாந்தினி என்றும் பெயர் சூட்டினார். சுற்றுப்பயணத் திட்டத்தில் இடம்பெறாத நிலையில் திருக்குறுங்குடியிலும், திருநெல்வேலி டவுன் வாகையடி முனையிலும் திறந்தவேனில் நின்றபடி முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
திருநெல்வேலி டவுனில் அவர் பேசும்போது, எனது தலைமையிலான ஆட்சி ஒரு மாதத்தில் கவிழும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறிவந்தார். இப்போது 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி சாதனை படைத்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்வர் பிரச்சாரம் மேற் கொண்ட வள்ளியூர், திருக் குறுங்குடி, களக்காடு, மேலச் செவல், திருநெல்வேலி டவுன் பகுதிகளில் முதல்வருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப் பட்டது. வாழை மரங்கள், கொடிதோரணங்கள், வரவேற்பு பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் கரகாட்டம், ஒயிலாட்டம், எம்.ஜி.ஆர். திரைப்பட பாடல் மேடை கச்சேரிகள், கும்ப மரியாதை என வரவேற்பு களைகட்டியிருந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago