காலிங்கராயன் கால்வாய் மற்றும் ஓடைகளில் சாயக்கழிவு கலப்பது தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்ந்த நிலையில், ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு வெண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் சாய, சலவை ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் காலிங்கராயன் கால்வாயில் கலந்து வந்தது. விவசாயிகள் நடத்திய ஆய்வில் இவை கண்டறியப்பட்டு 30 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட சில ஆலைகள் இரண்டு நாளில் திறக்கப்பட்டு, ஜெனரேட்டர் உதவியுடன் செயல்பட்டது கண்டறியப்பட்டது.
இதனால், ஆவேசம் அடைந்த விவசாயிகள் மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாய, சலவை ஆலை நிர்வாகங்களுக்கு சாதகமாக மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் செயல்படுவதாக அரசுக்கு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டன. இதன் எதிரொலியாக, ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில் விநாயகத்தை, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது. பெருந்துறை மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர் உதயகுமார், கூடுதல் பொறுப்பாக ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago