விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத் தில் நேற்று சட்டமன்ற பொதுஆய்வுக்குழு கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு ஆய்வுக் குழுத்தலைவர் துரைமுருகன் எம்எல்ஏ தலைமை தாஙகினார். ஆட்சியர் அண்ணாதுரை, திட்டஇயக்குநர் மகேந்திரன், சட்டப்பேரவை செயலாளர் ரேவதி, எம்எல்ஏக்கள் பொன்முடி, மஸ்தான், மாசிலாமணி, சீதாபதி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்த ஆய்வுக் குழு வினரிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:
நிலுவையில் உள்ள பணி களை சரியாக முடிக்க வேண்டும்.அரசின் நிதிகளை பயன்படுத்தி திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதிகாரிகள் முழு அர்ப்பணிப்போடு பணியாற்றி திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தியுள்ளோம் என்று இக்குழுவினர் தெரிவித்தனர்.
இக்குழுவின் தலைவர் துரை முருகனிடம் ஆய்வுக்குழு கூட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “இந்த ஆய்வு ரகசியமானது. வெளியே சொல்வ தற்கில்லை. அறிவுரைகள் சொல்லியுள்ளோம். இது குறித்து எதுவும் சொல்ல முடியாது” என்று தெரிவித்தார்.
ஆய்வு ரகசியமானது. வெளியே சொல்வதற்கில்லை. அறிவுரைகள் சொல்லியுள்ளோம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago