விவசாய சங்கத் தலைவர் கைதை கண்டித்து காட்டுமன்னார்கோவிலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

காட்டுமன்னார்கோவிலில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

காட்டுமன்னார்கோவில் அருகே வீரனந்தபுரம் பகுதியில்தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக போதிய காலஅவகாசம் வழங்காமல் கடந்த 1-ம் வீடுகள்இடிக்கப்பட்டன. இதனை தடுத்தகாவிரி பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரனை காவல்துறையினர் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இளங்கீரன் மீதுள்ள வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் அனைத்து கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையம் எதிரே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் காட்டுமன்னார்கோவில் காவல் துறையினரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் , நெய்வேலி காவல் நிலையத்தில் விசாரணை கைதி சுப்பிரமணியன் உயிரிழப்புக்கு காரணமான காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்