சிவகங்கையில் திருமண நிதி உதவித் திட்டத்தில் பணத்தைப் பெற வேண்டுமானால் தங்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று பயனாளிகளை நிர்பந்தித்த சமூகநலத்துறை ஊழியர்கள் சிலரைக் கண்டித்து பெண்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
சமூகநலத் துறை சார்பில் தாலிக்குத் தங்கம் திட்டத்தில் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி, 8 கிராம் தங்கம் வழங்கப் படுகின்றன. மேலும் பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும், மற்றவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தில் 2018-ம் ஆண் டுக்குப் பிறகு திருமண நிதியுதவி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் 2018 மே முதல் 2019 மார்ச் வரை 2,230 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். எம்எல்ஏ நாகராஜன் முன்னிலை வகித்தார். அமைச்சர் ஜி.பாஸ்கரன் பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம், நிதிஉதவிக்கான ஆணைகளை வழங்கினார். முன்னாள் எம்.பி செந்தில்நாதன், சமூகநல அலுவலர் இந்திரா, சமூகநலக்கண்காணிப்பு அலுவலர் பாலா பங்கேற்றனர்.
இந்நிலையில் விழா முடிந்ததும், பயனாளிகளிடம் திருமண உதவித் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு சமூகநலத் துறை ஊழியர்கள் சிலர் பணம் கேட்டதாகத் தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த பெண்கள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் சமூக நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை அதிகாரிகள், போலீஸார் சமாதா னப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பயனாளிகள் கூறு கையில், திருமண நிதிஉதவிக்காக ஓராண்டுக்கும் மேலாகக் காத் திருந்தோம். இந்த நிதியுதவியைப் பெற ஏற்கெனவே ரூ.2,500 கொடுத்துள்ளோம். மீண்டும் ரூ.5 ஆயிரம் கொடுத்தால்தான் திருமண நிதியை வங்கியில் செலுத்துவோம் என ஊழியர்கள் கூறுகின்றனர் என்றனர்.
சமூகநலத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "பய னாளிகள் தெரிவித்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago