சிவகங்கையில் ட்ரோன் மூலம் டிஜிட்டல் வரைபடம் தயாரிக்கும் பணி

By செய்திப்பிரிவு

நகர் ஊரமைப்புத்துறை சார்பில் நிலப்பரப்பைத் துல்லியமாகப் படம் எடுத்து வரைபடம் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் முதன்முறையாக சிவகங்கை மாவட்டத்தில் நேற்று இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் பி. மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக, சிவகங்கை நகரின் மொத்த பரப்பான 5.9 சதுர கி.மீ.-க்கு வரைபடம் தயாரிக்கப்படுகிறது. இதற்காக 5 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்ட ட்ரோன் பயன்படுத்தப்படுகிறது. ட்ரோன் 120 மீ. உயரத்தில் பறந்து நிலமட்டத்தில் 5 செ.மீ. உயரத்தைக் கொண்ட அமைப்புகளைக்கூட துல்லியமாகப் படம் எடுக்கும். இப்பணி மாவட்டம் முழுவதும் 2 மாதத்துக்குள் முடிக்கப்படும் என நகர் ஊரமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். நகர் ஊரமைப்புத் துணை இயக்குநா் நாகராஜன், திட்ட இயக்குநா் (உள்ளூர் திட்டக் குழுமம்) மணிகண்டன், மேற்பார்வை அலுவலா் அண்ணாமலை, வரைபட உதவி மேலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்