தென்னை மரங்களில் தென்னை சுருள் ஈ பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தலைவர் செ.நல்லசாமி தலைமையில் ஈரோட்டில் நடந்தது. சங்க செயலாளர்கள் த.கனகராஜ், விஸ்வநாதன், ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் ஈ.வி.கே.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கீழ்பவானி கால்வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்றினால், கடைக் கோடிவரை நீரைக் கொண்டு செல்ல முடியும் என்பது தவறானது. 10 தொகுதி மக்களின் எதிர்ப்பை மீறி, கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க பூர்வாங்கப் பணி தொடங்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இப்பணியை உடனடியாக நிறுத்த அரசு உத்தரவிட வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தென்னை மரங்களை, வெள்ளைச் சுருள் ஈ தாக்கத் தொடங்கியுள்ளது.
இதனால், வெடித்திருக்கும் பாலைகளில் குரும்பை ஒட்டாமல், உதிர்ந்து வருகின்றன. தென்னை மரங்களின் காய்ப்பு திறனை இது வெகுவாகக் குறைக்கும். எனவே, வெள்ளை சுருள் ஈயைக் கட்டுப்படுத்த, வேளாண்மைத்துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago