விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த கோரிக்கை

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழில் மந்திரங்கள் ஓதி குடமுழுக்கு விழா நடத்த வேண்டும் என புதுக்கோட்டை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அலுவல கத்தில் தெய்வீகத் தமிழ்ப் பேரவையினர் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து இந்த பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வே.பூ.ராம ராஜ் கூறியது:

தஞ்சை பெருவுடையார் கோயில், கரூர் பசுபதீஸ்வரர் கோயில் ஆகியவற்றில் நீதி மன்ற உத்தரவின்படி தமிழில் மந்திரங்கள் ஓதி குடமுழுக்கு விழா நடைபெற்றது.

மேலும், தமிழ் ஓதுவார்களின் பெயர்களையும் குடமுழுக்கு விழா அழைப்பிதழ்களில் குறிப் பிட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

எனவே, அரசு மற்றும் நீதிமன்றங்களின் உத்தரவுகளை பின்பற்றி விராலிமலை சுப்பிர மணிய சுவாமி கோயிலிலும் தமிழில் மந்திரங்கள் ஓதி குட முழுக்கு விழா நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்