அரியலூர் மாவட்டம் கோவிந்தபுரம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் சிமென்ட் ஆலைக்கு பொய்யாதநல்லூர் அருகேயுள்ள இலுப்பையூர் மற்றும் ஓட்டக்கோவில் கிராமங்களில் புதிய சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோண்ட பொதுமக்களிடையே கருத்துக்கேட்பு கூட்டம் அந்தந்த பகுதிகளில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியர் த.ரத்னா தலைமை வகித்தார். மாவட்ட மாசுக் கட்டுப்பாடு செயற்பொறியாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித் தார். விவசாயிகள், கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு தங்களின் கருத் துகள், கோரிக்கைகளை பதிவு செய்தனர்.
இதில், மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் செங்கமுத்து, மக்கள் சேவை இயக்க மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம், சமூக ஆர்வலர்கள் சங்கர், தமிழ்களம் இளவரசன், சோலைவனம் இளவரசன் உள்ளிட்டோர் பேசும் போது, “சுண்ணாம்புக்கல் சுரங்கத் துக்கு இயக்கப்படும் லாரிகள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சென்று வர வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் தயாரிக் கப்படும் சிமென்ட் அரியலூர் மாவட்ட மக்களுக்கு குறைந்த விலைக்கு தரப்பட வேண்டும். காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மூடவும், அரசு அறிவுரை மற்றும் சட்டங்களுக்கு உட்பட்டு சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோண்டவும் ஆட்சியர், மாசுக் கட்டுப்பாடு வாரிய அலுவலரும் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்” என தெரிவித் தனர்.
தமிழ்ப்பேரரசு கட்சி பொதுச் செயலாளர் கவுதமன், சுண்ணாம் புக்கல் சுரங்கத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும் பத்தினருக்கு கட்டாயம் வேலை வழங்க வேண்டும். இரவு நேரங்களில் ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகையை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கல்வி, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்றார்.
இலுப்பையூர் ஊராட்சித் தலைவர் அன்பழகி, ஓட்டக் கோவில் ஊராட்சித் தலைவர் செங்கமலை, பொய்யாதநல்லூர் சரண்ராஜ், திருமுருகன், தணிகா சலம், சந்திரசேகர், வரதராஜன் உள்ளிட்டோர் பேசும்போது, பள்ளிகள் மற்றும் பொதுமக்க ளுக்கு பல்வேறு வசதிகளை செய்து வருவது போல சாலை வசதி, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகளவு செய்து தரவேண்டும் என தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago