திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் 13-வது வார்டில் ஆதரவற்றோர் சிகிச்சைப் பிரிவு நேற்று தொடங்கப்பட்டது.
மருத்துவமனை முதல்வர் கே.வனிதா முன்னிலையில், இந்த புதிய சிகிச்சைப் பிரிவை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் ஆகியோர் திறந்துவைத்தனர்.
இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் கே.வனிதா, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அவ்வப்போது ஆதரவற்றோர் இல்லங்கள், தொண்டு நிறுவனங் கள், தன்னார்வலர்கள், காவல் துறையினர் மூலம் ஆதரவற்றோர் சிகிச்சைக்கு சேர்க்கப்படுகின்றனர்.
இவர்கள் சில நேரங்களில் சிகிச்சை பெறும்போதே மருத்துவமனையில் இருந்து வெளியேறி விடுவது உட்பட பல்வேறு நடைமுறை சிக்கல்கள் நேரிட்டதால், 20 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சிகிச்சை பெறும் ஆதரவற்றோருக்கு பிரத்யேக சிகிச்சை, கூடுதல் கண்காணிப்பு கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிகிச்சை முடியும் ஆதரவற்றவர்களை காவல் துறை உதவியுடன், சட்டப்படி உறவினர்களிடம் ஒப்படைக்கவும், உறவினர் அல்லாதவர்களை ஆதர வற்றோர் இல்லத்தில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க இந்த பிரத் யேக சிகிச்சைப் பிரிவு உதவியாக இருக்கும்.
தற்போது இந்தச் சிகிச்சைப் பிரிவுக்கென தலா ஒரு பொது மருத்துவர், எலும்பு மருத்துவர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ள துடன், 3 ஷிப்டுகளிலும் பணி யாற்ற செவிலியர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago