தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்து, தேர்தல் தேதி அறிவிப்புக்குப்பின் முடிவு செய்யவுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தி யாளர்களிடம் நேற்று அவர் கூறிய தாவது: தமிழகத்திலுள்ள 7 சமுதாய பெயர்களை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்யவும், பட்டியல் பிரிவிலிருந்து நீக்கவும் வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம். கடந்த 13-ம் தேதி இது தொடர்பான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள் ளது. சென்னையில் நடைபெற்ற விழாவிலும் பிரதமர் மோடி இதை அறிவித்திருந்தார். ஆனால், பெயர் மாற்றம் மட்டுமே செய்வது என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. பட்டியல் பிரிவிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி, 18-ம் தேதி தமிழகத்துக்கு வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும், 25-ம் தேதி கோவைக்கு வரும் பிரதமரிடமும், நேரில் வலியுறுத்த உள்ளேன். தமிழகம் உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைத்து எம்.பி.க்களுக்கும் கடிதம் எழுதவுள்ளோம். தேர்தல் தேதி அறிவிப்புக்குப்பின், எங்களது அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவு செய்வோம் என்று தெரிவித்தார்.
`அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் உள்ளதா?’ என்ற கேள்விக்கு, கிருஷ்ணசாமி பதில் அளிக்கவில்லை. இதுபோல், அரசியல் சார்ந்த பல கேள்வி களுக்கும் அவர் மவுனம் சாதித்தார்.
அரசியல் சார்ந்த பல கேள்வி களுக்கும் அவர் மவுனம் சாதித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago