திருமலைக்கொழுந்துபுரம் அருகே யுள்ள மணப்படை வீடு மற்றும் மணக்காட்டைச் சேர்ந்த 31 பேர், மணியாச்சி மற்றும் புதியம் புத்தூரு க்கு கூலி வேலைக்காக சுமை ஆட்டோவில் நேற்று முன் தினம் சென்றனர்.
மணியாச்சி அருகே ஓடையில் சுமை ஆட்டோ கவிழ்ந்ததில், மணப்படை வீடு அம்பேத்கர் நகரை சேர்ந்த பேச்சியம்மாள், ஈஸ்வரி, மலையழகு, மனோகரன் மனைவி பேச்சியம்மாள், கோமதி ஆகிய 5 பெண்கள் உயிரிழந்தனர். 26 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு தலா ரூ.1 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, உடல் களை வாங்க மறுத்து அவர்களது உறவினர்கள், திருநெல்வேலி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடம்முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அது போல், மணப்படைவீடு கிராமத்தில் பொதுமக்கள் திரண்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago