வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் 50 ஆண்டு களுக்கு முன்பு படித்த மாண வர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1971-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள், கடந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வேலூர், தி.மலை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல் பட்டு, விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களில் வசித்து வரும் முன்னாள் மாணவர்கள் 71 பேர் தங்களது குடும்பத்தாருடன் பங்கேற்றனர். அவர்கள், ஒருவருக்கு ஒருவர் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர் ஒன்றாக குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பள்ளி நாட்களில் தாங்கள் விளையாடிய மைதானம், படித்த வகுப்பறைகள், நூலகம், இறைவணக்கம் நடந்த இடத்தை முன்னாள் மாணவர்கள் சென்று பார்வையிட்டு, தங்களது பழைய நினைவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர்கள் சார்பில் வெங்கடேஸ்வரா பள்ளிக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் மாணவர்கள் அமர்ந்து சாப்பிடக்கூடிய உணவு அறைக்கான புதிய கட்டிடத்தை அவர்கள் கட்டிக்கொடுத்தனர்.
இதற்கான திறப்பு விழாவும் நேற்று நடைபெற்றது. வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்குணசேகரன் சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்டு, புதிய உணவு அறை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதேபோல, பள்ளியில் உள்ள சமையலறையை முன்னாள் மாணவர்கள் புதுப்பித்து வழங்கியுள் ளனர். அதில், புதிய காஸ் அடுப்பு வசதியும் செய்யப் பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் நெப்போலியன் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து பள்ளிக்கு உதவி செய்திருப்பதை ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago