வேலூர் தொரப்பாடியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான ரேஷன் கடை எம்எல்ஏ கார்த்திகேயன் திறந்து வைத்தார்

By செய்திப்பிரிவு

வேலூர் தொரப்பாடி எம்ஜிஆர் சிலை எதிரே ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் ரேஷன் கடையை எம்எல்ஏ கார்த்திகேயன் நேற்று திறந்து வைத்தார்.

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தொரப்பாடியில் செயல் பட்டு வரும் ரேஷன் கடை கடந்த பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. அக்கட்டிடம் சிதிலமடைந்து காணப்பட்டதால் ரேஷன் கடையை புதிய கட்டிடத்தில் இடமாற்றம் செய்ய வேண்டும் என பொது மக்கள் தரப்பில் கோரிக்கை விடுக் கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் தொகுதி மேம் பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து பணிகள் முடிவுற்றதால் தொரப்பாடி எம்ஜிஆர் சிலை எதிரே புதிய கட்டிடத்தில் ரேஷன் கடை திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. வேலூர் சட்டப்பேரவை உறுப் பினர் கார்த்திகேயன் தலைமை வகித்து புதிய கட்டிடத்தில் அமைக்கப்பட்ட ரேஷன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்