திருப்பத்தூர் மாவட்டத்தில் 11,287 பயனாளிகளுக்கு ரூ.85.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீல் ஆகியோர் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் 11,287 பயனாளிகளுக்கு ரூ.85.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீல் ஆகியோர் வழங்கினர்.

திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளில் 11 ஆயிரத்து 287 பயனாளிகளுக்கு ரூ.85.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூரில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஆகியோர் ரூ.85.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசும் போது, "தமிழகத்தில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் சுமார் 1 லட்சம் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க முதல்வர் பழனிசாமி உத்தர விட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,000 பெண்களுக்கு நலத்திட்ட உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு படிப்படியாக வழங்கப்படும்.

கடந்த 2011-ம் ஆண்டு ரூ.5,500 கோடி விவசாய பயிர்க்கடனை அதிமுக அரசு தள்ளு படி செய்தது. தற்போது, ரூ.12,110 கோடி பயிர்க் கடனை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது உலகத் திலேயே எங்குமே நடைபெறாத அறிவிப்பாகும்.

இந்த அறிவிப்பு மூலம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் ரூ.700 கோடி மதிப்பிலான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டு வரும் அம்மா மினிகிளினிக் மூலம் கிராமப்புற மக்கள் பெரிதும் பயன்பெற்று வருகின்றனர்’’ என்றார்.

பின்னர், அமைச்சர் நிலோபர் கபீல் பேசும்போது, ‘‘தமிழக முதல்வர் அறிவித்துள்ள 1100 தொலைபேசி எண்ணில் பொது மக்கள் தங்களது குறைகளை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை தெரிவிக்கலாம். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

வாணியம்பாடியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு 5 பிரிவுகள் செயல்படுகின்றன. இங்கு, பயிற்சி பெறுவோர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேலை வாய்ப்புகள் உருவாக்கி தரப்படு கிறது. மக்களுக்கு தேவையான வற்றை அரசே மக்களை தேடிச் சென்று செய்கிறது’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், சார் ஆட்சியர் வந்தனா கர்க் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்