குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட 504 அடுக்குமாடி குடியிருப்புகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் பெரம்பலூர் அருகே ரூ.41.02 கோடியில் கட்டப்பட்ட 504 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் ப. வெங்கட பிரியா வழங்கினார்.

அப்போது அவர் கூறியது: வீடு இல்லாதவர்களுக்கும், புறம்போக்கு நிலங்களில் குடியி ருப்பவர்களுக்கும் சொந்தமாக வீடு வழங்கும் பொருட்டு பயனாளிகள் பங்களிப்புடன், மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் பெரம்பலூர் மாவட்டம் கவுள்பாளையம் கிராமத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 19,682.25 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.41.02 கோடி மதிப்பில் 504 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

ஒரு குடியிருப்புக்கு மாநில அரசின் பங்களிப்பு ரூ.5 லட்சம், மத்திய அரசின் பங்களிப்பு ரூ.1.50 லட்சம், பயனாளிகளின் பங்களிப்பு ரூ.1.64 லட்சம் என மொத்தம் ரூ.8.14 லட்சம் மதிப்பில் 37.165 சதுர மீட்டர் பரப்பளவில், முன்அறை, படுக்கையறை, சமையலறை, கழிப்பறை, குளியலறை ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.ராஜேந் திரன், உதவி செயற்பொறியாளர் ச.ஷகீலா பீவி, உதவி பொறியாளர் நவநீத கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கவுள்பாளையத்தில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 19,682.25 ச.மீ. பரப்பளவில் ரூ.41.02 கோடியில் 504 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்