திருச்சி மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் 1,984 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் சமூக நலத் துறை சார்பில் ஏழை மகளிர் 3,100 பேருக்கு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் நிதியுதவியும் மற்றும் வருவாய்த் துறை சார்பில் 1,984 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களும் வழங்கப்படவுள்ளன.

இந்த நலத் திட்ட உதவிகள் வழங்குவதற்கான தொடக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், மாநில பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் பயனாளிகள் சிலருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி, பணியைத் தொடங்கிவைத்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் என்.நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் பேசியது:

2020- 2021-ம் நிதியாண்டில் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் 3,100 பேருக்கு நிதியுதவியாக ரூ.12.30 கோடி மற்றும் ரூ.6.90 கோடி மதிப்பில் தங்கம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது பணிகள் தொடங்கியுள்ளன.

தமிழக அரசின் சிறப்பு ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 1,984 பேருக்கு ரூ.10.93 கோடி மதிப்பில் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட உள்ளன என்றனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் தமீம்முனிசா, நகர கூட்டுறவு வங்கித் தலைவர் வி.பத்மநாபன், அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச் சாலை தலைவர் விஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்