திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கீழபொய்கைப் பட்டியிலுள்ள ஒருவரது கடலைத் தோட்டத்தில் சில மயில்கள் நகர்ந்து செல்ல முடியாமல் கிடப்பதாக வனத்துறையினருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் வன சரகர் மகேஸ்வரன் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு 6 ஆண் மயில்கள், 16 பெண் மயில்கள் என 22 மயில்கள் இறந்து கிடந்தன. அவற்றை மீட்டு, கால்நடை மருத்துவர் தமிழ்செல்வன் தலைமையிலான குழுவினர் உடற்கூராய்வு மேற்கொண்டனர். பயிர்களுக்கு சேதம் விளைவித்ததால், விஷம் வைத்து மயில்களை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago