ரூ. 30 லட்சம் மதிப்பு நெல் விதைக்கு தடை

By செய்திப்பிரிவு

புளியங்குடி பகுதியில் ரூ.30.42 லட்சம் மதிப்பிலான நெல் விதைகளுக்கு விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குநர் ரா. ராஜ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியிலுள்ள விதை விற்பனை நிலையங்களில், விதிகளை மீறியதாக 110.8 மெட்ரிக் டன் அளவு நெல் விதைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

மேலும், 2 விதை சுத்தி நிலையங்கள், ஒரு விற்பனை நிலையத்துக்கு விதை விற்பனை உரிமம் தற்காலிகமாக 1 மாதத்துக்கு ரத்து செய்யப்பட்டது.

விதை விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்களிடம் இருந்து தரமான விதைகளை மட்டுமே வாங்கி, இருப்பு வைத்து விவசாயிகளுக்கு பில்லுடன் விற்பனை செய்ய வேண்டும். விதைகள் தரமற்ற தாக இருக்கும்பட்சத்தில் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீதும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விதைகளை உரிய முறையில் சேமித்து வைக்க வேண்டும். இருப்பு மற்றும் விலை விவர பட்டியல்கள் நன்கு பார்வையில் படும்படி பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்