ராணிப்பேட்டையில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப் பாளர்களாக மாநில செயலாளர் உதயகுமார், மாநில போராட்டக் குழு தலைவர் ஆசிரியர் ரகுபதி, மாநில இளைஞரணி தலைவர் சுபாஷ், வேலூர் மாவட்டத் தலைவர் நல்லாசிரியர் லோகநாதன், திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் ஆனந்த ரெட்டியார் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வர்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற் றுள்ள நகைக்கடன், டிராக்டர் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். ராணிப் பேட்டை-சிப்காட் பகுதியில் தேங்கியுள்ள ஒன்றரை லட்சம் டன் குரோமிய கழிவை அகற்ற வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை விவசாயப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பின்னர், விவசாயிகள் சங்க முக்கிய நிர்வாகிகள் ராணிப் பேட்டை ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் வழங்கிய மனுவில், ‘‘காட்டுப்பன்றிகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப் பீட்டை உடனடியாக வழங்க வேண்டும்.
வனப்பகுதியில் இருந்து யானைகள், குரங்குகள், பன்றிகள், மான், மயில் போன்ற வன விலங்குகள் விளைநிலங் களில் நுழையாமல் இருக்க வனப்பகுதியில் குடிநீர் வசதி செய்ய வேண்டும். விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும்" என குறிப்பிட்டிருந் தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago