போலி ஆவணம் தயாரித்து 2.5 ஏக்கர் நிலம் விற்பனை தி.மலை மாவட்ட எஸ்.பி.,யிடம் விவசாயி புகார்

By செய்திப்பிரிவு

2.5 ஏக்கர் விவசாய நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்பனை செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என தி.மலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்திடம், விவசாயி புகார் அளித்துள்ளார்.

இது குறித்து தி.மலை அடுத்த நூக்காம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவிவசாயி மனோகரன் என்பவர் நேற்று முன் தினம் எஸ்.பி., அரவிந்த்திடம் அளித் துள்ள மனுவில், “நான், எனது தந்தை பெயரில் இருந்த நிலத்தை அடமானமாக வைத்து, கிளியாப்பட்டு கிராமத்தில் வசிக்கும் ஒருவரிடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 லட்சம் கடன் பெற்றேன். அதன்பிறகு, பாகப் பிரிவினை செய்து எனக்கு 2.41 ஏக்கர் நிலம் பிரிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2003-ம் ஆண்டு, ஏற்கெனவே தந்தை பெயரில் இருந்த அடமான நிலத்துக்கு பதிலாக எனக்கு பாகப்பிரிவினையாக பிரிக்கப் பட்ட 2.41 ஏக்கர் நிலத்தை அடமா னத்துக்கு கொடுத்து தந்தை நிலத்தை மீட்டேன்.

அப்போது, ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டியாக ரூ.1.45 லட்சம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான எனது நிலத்தை, சென்னை அடுத்த பல்லாவரத்தைச் சேர்ந்த வருக்கு போலி ஆவணம் மூலம்கிரையம் செய்து கொடுக்கப் பட்டுள்ளது. நிலப்பட்டா, சிட்டா, அடங்கல் போன்றவை எனது பெயரில் உள்ளது. இந்நிலையில், போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட எனது நிலத்தை மீட்டுக் கொடுத்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்