ஆதார் அட்டை திருத்தம் மேற்கொள்ள தலைமை அஞ்சலகத்தில்3 நாட்களுக்கு சிறப்பு முகாம் திருப்பத்தூர் கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

By செய்திப்பிரிவு

ஆதார் அட்டை பதிவு மற்றும் திருத்தம் மேற்கொள்ள திருப்பத் தூர் தலைமை அஞ்சலகத்தில் 3 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருப்பத்தூர் தலைமை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப் பில், "அரசின் அனைத்து சேவைகளையும் மேற்கொள்ள ஆதார் அட்டை அவசியமாகிறது. அதனால், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவும், திருத்தம் மேற்கொள்ளவும் பொதுமக்கள் அரசின் இ-சேவை மையங்களை நாடிச்செல்கின்றனர். ஒரே நேரத் தில் அதிக அளவில் பொது மக்கள் கூடுவதால் இ-சேவை மையங் களில் எப்போது பார்த்தாலும் கட்டுக்கடங்காத கூட்டம் வரிசை யில் நின்று அலைமோதுகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் தங்களது ஆதார் அட்டைகளை பெறுவதற்காக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் இரவே வந்து காத்திருக்கும் நிலை உள்ளது.

மக்களின் அவசர தேவை கருதியும், அவர்களுடைய வசதிக் காகவும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன் அடிப் படையில் வரும் 19-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை ‘சிறப்பு முகாம்’ திருப்பத்தூர் தலைமை தபால் நிலையத்தில் நடக்கிறது. முகாமில் புதிய ஆதார் அட்டை பெறவும், முகவரி, புகைப்படம், பெயர், பிறந்த தேதி, செல்போன் எண்கள் திருத்தம் செய்வது மற்றும் 15 வயதுக்குட்பட்டவர் களுக்கு பயோமெட்ரிக் அட்டைபுதுப்பித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆதார் அட்டை திருத்த பணி களுக்கு ரூ.50 மற்றும் பயோ மெட்ரிக் புதுப்பிக்க ரூ.100-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். புதிய பதிவுகளுக்கு கட்டணம் ஏதும் இல்லை. எனவே, சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்