சென்னையில் நடந்த காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில் சிறப்பிடம் வேலூர் மாவட்ட காவலர்களுக்கு எஸ்.பி., பாராட்டு

By செய்திப்பிரிவு

மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் சிறப்பிடம் பிடித்து கேடயங்களை பெற்ற வேலூர் மாவட்ட காவலர்களை எஸ்பி செல்வகுமார் பாராட்டினார்.

தமிழக காவல் துறையினருக் கான துப்பாக்கிச் சுடும் போட்டி சென்னையில் கடந்த 29 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெற்றது. இதில், சென்னை மாநகர காவல் துறை, வடக்கு மண்டலம், மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், மத்திய மண்டலங்களில் இருந்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர். ரைபிள், கார்பன் துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி சுடும் போட்டிகள் பல்வேறு சுற்றுகளின் கீழ் நடைபெற்றன.

வடக்கு மண்டல காவல் துறையினர் ரைபிள், கார்பன் துப்பாக்கி பிரிவில் முதலிடத்தை பிடித்ததுடன் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் ரைபிள், கார்பன் மற்றும் கைத்துப்பாக்கி பிரிவில் மாநில அளவில் இரண்டாமிடம் என மூன்று கேடயங்களை பெற்றுள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பிறகு வடக்கு மண்டல காவல் அணியினர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்றுள்ளனர்.

வடக்கு மண்டல அளவிலான குழுவில் இடம் பெற்றிருந்த வேலூர் சத்துவாச்சாரி உதவி ஆய்வாளர் விக்னேஷ், வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆதர்ஷ், ஆயுதப்படை பெண் காவலர்கள் சுசி, திவ்யா ஆகியோர் பங்கேற்று அதிக புள்ளிகளை பெற்றனர். பெண் காவலர் சுசி, கார்பன் துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார். துப்பாக்கிச் சுடும் போட்டியில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்த காவலர்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் நேற்று பாராட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்