கீழ்பவானி முறைநீர் பாசனசபை பொதுக்குழுக் கூட்டம் கோபியை அடுத்த குள்ளம்பாளையம் பாசன சபை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பாசன சபை தலைவர்கள் பழனிசாமி (யு5), பி.என்.சண்முகத்தரசு (யு6) ஆகியோர் தலைமை தாங்கினர். பாசன சபை செயலாளர்கள் பாலமுருகன், கே.கே.குணசேகரன் வரவேற்றனர்.
கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் பொ.காசியண்ணன், துணைத்தலைவர் அ.ராமசாமி, செயலாளர் கி.வடிவேல், பொருளாளர் ஆர்.ஈஸ்வரமூர்த்தி, இணைச்செயலாளர் மா.வெங்கடாசலபதி ஆகியோர் பாசன விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விளக்கிப் பேசினர்.
அதிகாரிகள் தரப்பில் ஈரோடு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஏ.அருள், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் வி.கே.விஸ்வநாதன், கோபி கால்வாய் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் எஸ்.கே.ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். பாசன சபை செயலாளர் பி.சி.செங்கோட்டையன், அய்யம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் பா.சென்னியப்பன் ஆகியோர் நீரை சேமிக்க எளிய வழிகள் குறித்த தொகுப்பினை வெளியிட்டனர்.
கூட்டத்தில், குடிமராமத்து பணிகளுக்கு நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கீழ்பவானி கால்வாய் கரைகளில் நீர் அளவிடும் இடங்களில் புதிய அளவுகோல் அமைத்தல், சேதமடைந்த கொப்பு வாய்க்கால்களை சீரமைத்தல் மற்றும் கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் கரைகள் மண் பராமரிப்பு பணிகள் செய்ய வலியுறுத்தியும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago