பனிப்பொழிவு காரணமாக மல்லிகை வரத்து குறைந்த நிலையில், சத்தியமங்கலம் மலர் சந்தையில் விலை உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பவானி சாகர், கொத்தமங்கலம், புதுவடவள்ளி, சிக்கரசம் பாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்க ளில், 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மலர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர்.
இங்கு பறிக்கப் படும் மலர்கள், சத்தியமங்கலத் தில் விவசாயிகளால் நடத்தப்படும் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இங்கிருந்து கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக் கும், அண்டை மாநில மான கர்நாடகா, கேரளாவுக்கும் மலர்கள் அனுப்பப்படுகின்றன.
தற்போது பனிப்பொழிவு இருப்பதால் மல்லிகை வரத்து குறைந்துள்ளது. அதே நேரத்தில் திருமண முகூர்த்த நாட்கள் மற்றும் கோயில் திருவிழாக்கள் நடப்பதால், பூக்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சத்தியமங்கலம் மலர்சந்தையில் நேற்று மல்லிகை விலை ரூ.1225-க்கு விற்பனை யானது. இருப்பினும், கரோனா காலத்தில் மலர் விற்பனை முழுமையாக பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது கிடைக்கும் விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம் மலர் சந்தையில் நேற்று முல்லை கிலோ ரூ.800-க்கும், காக்கடா ரூ.1000, ஜாதி முல்லை ரூ.1000, கனகாம்பரம் ரூ.700-க்கும் விற்பனையானது. செண்டு மல்லி கிலோ ரூ.25-க்கும், கோழிக்கொண்டை ரூ.60-க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், அரளி ரூ.140-க்கும் விற்பனையானது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago