திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் தேசிய பார்வையற் றோர் சம்மேளனத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் அளித்த மனுவில், “சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை புதுச்சேரி மாநிலத்தைப்போல உயர்த்தி வழங்க வேண்டும்.
அரசுப் பணிகளுக்கு பார்வையற்றோருக்கென சிறப்புப் போட்டித் தேர்வுகளை நடத்த வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.சம்சுதீன் தலைமையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் ஆட்சி யர் அலுவலகத்தில் அளித்த மனுவில், ‘‘பால் பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைப் பதற்காக ஆயிரக்கணக்கான கட்டிடங்களை அப்புறப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால், இந்தப் பகுதி வணிகர்கள் உட்பட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், பால் பண்ணை முதல் துவாக்குடி வரை பறக்கும் சாலை அமைக்க வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
லால்குடி வட்டம் நெற்குப்பை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அங்கமுத்து மனைவி மணக்காயி(70) என்பவர், தனது வீட்டை உறவினர்கள் 2 பேர் ஏமாற்றி அபகரிக்க முயற்சிப்பதாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி, சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago