திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி தெற்குத் தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் ரஞ்சித்குமார் (30). மணிகண்டம் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்த இவருக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மதியம் பணி முடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குப் புறப்பட்டார்.
தாளக்குடி அருகே அகிலாண்டபுரம் பகுதியில் சென்றபோது, லால்குடியிலிருந்து கொள்ளிடம் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதியது. அப்போது ரஞ்சித் அணிந்திருந்த ஹெல்மெட் இரண்டாக உடைந்ததுடன், அவரது தலையிலும் படுகாயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து சமயபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago