பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், தமிழக அரசின் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு சில மாதங்களுக்கு முன்பே, வேளாண் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்த விவசாயிகள் பலருக்கு கடன் அனுமதி சான்று வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை. மேலும், இவர்களுக்கு கடன் தள்ளுபடி இல்லை என்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, அதிகாரிகளின் இந்த செயலைக் கண்டித்தும், பார பட்சமின்றி விண்ணப்பித்த அனை வருக்கும் வேளாண் கடன்களை உடனடியாக வழங்க வலியு றுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.
இப்போராட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ஆர்.ராஜா சிதம்பரம் தலைமை வகித்தார். நிர்வாகி என்.செல்லதுரை, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ரமேஷ், இந் திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஞானசேகரன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago