விக்கிரவாண்டி வேளாண் அலுவலகத்தில் முறைகேடு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

விக்கிரவாண்டி வேளாண் அலுவலகத்தில் விதைகள் விற்பனை செய்ததில் முறைகேடு நடந்துள்ள தாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி வேளாண் துறைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப் பதாவது:

விக்கிரவாண்டி வேளாண் அலுவலகத்தில் விதைகள் மற்றும் வேளாண் தளவாடப்பொருட்களை விற்பனை செய்ததில் முறைகேடு நடந்துள்ளது. வேளாண் விற் பனை நிலையம் பூட்டியே கிடப்பதால் விவசாயிகள் பாதிக் கப்பட்டுள்ளனர். இதேபோல் விதைகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்து வதால் அதன் முளைப்புத்திறன் குறைகிறது. விதைக்கான கிரைய தொகை 6 மாதங்களுக்கு பிறகே கிடைக்கிறது. மானவாரி உழவுக்கு மானியம் வழங்கப்படுவதில்லை. எண்ணாயிரம் கிராமத்தில் உள்ள துணை வேளாண் அலுவலகம் திறக்கப்படுவதில்லை.

இதுகுறித்து புகார் தெரிவித் தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விரிவான விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரி வித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்