கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற் பனைக் கூடத்தில் இருந்து, பழநி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் தயாரிப்பிற்காக, ரூ.22 லட்சம் மதிப்பிலான நாட்டுச்சர்க்கரையை தேவஸ்தான நிர்வாகத்தினர் கொள்முதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப் பாடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் கரும்பினைக் கொண்டு நாட்டுச்சர்க்கரை தயாரிப்புப் பணியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதி விவசாயிகளிடம் இருந்து பழநி தண்டாயுதபாணி கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தம் தயாரிப்பிற்காக நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்வது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. தைப்பூசம் மற்றும் அதனைத் தொடர்ந்த நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், பஞ்சாமிர்தம் தயாரிப்பிற்காக நாட்டுச்சர்க்கரை கொள்முதல் அதிகரித்துள்ளது.
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து, கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதியன்று ரூ.22 லட்சம் மதிப்பி லான 918 மூட்டை நாட்டுச் சர்க்கரையை பழநி தேவஸ்தானம் கொள்முதல் செய்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன் தினம் நடந்த ஏலத்தில் 1003 மூட்டை நாட்டுச்சர்க்கரையை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் 60 கிலோ மூட்டைக்கு குறைந்தபட்ச விலையாக 2180 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2220 ரூபாய்க்கும், சராசரி விலையாக 2200 ரூபாய்க்கும் ஏலம் போனது.
41 விவசாயிகளிடம் இருந்து 60 ஆயிரத்து 180 கிலோ நாட்டுச் சர்க்கரையை, ரூ.22 லட்சத்து ஆயிரத்து 960-க்கு பழநி முருகன் கோயில் தேவஸ்தான நிர்வாகத்தினர் கொள்முதல் செய்ததாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மு.சீனிவாசன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago