சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி ஆட்சியர், காவல் ஆணையர் பங்கேற்று 5 கி.மீ தூரம் ஓடினர்

By செய்திப்பிரிவு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக காவல்துறை சார்பில் திருச்சியில் நேற்று மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் பங்கேற்று 5 கி.மீ தூரம் ஓடினர்.

32-வது சாலை பாதுகாப்பு மாதத் தையொட்டி, திருச்சி மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட்டும், 4 சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட்டும் அணிய வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாநகர காவல்துறை சார்பில் நேற்று மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

தென்னூர் உழவர்சந்தை மைதானத்திலிருந்து தொடங்கிய இப்போட்டியில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், மாநகராட்சி ஆணை யர் சிவசுப்பிரமணியன், மாநகர காவல் துணை ஆணையர்கள் பவன்குமார் ரெட்டி (சட்டம், ஒழுங்கு), வேதரத்தினம் (குற்றம், போக்குவரத்து) உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று எம்ஜிஆர் சிலை ரவுண்டானா, பாரதி தாசன் சாலை, தலைமை தபால் நிலைய சந்திப்பு, டிவிஎஸ் டோல்கேட் வழியாக அண்ணா விளையாட்டரங்கம் வரை 5 கி.மீ தூரம் ஓடி போட்டியை நிறைவு செய்தனர்.

இப்போட்டியின் பெண்கள் பிரிவில் தஞ்சாவூரைச் சேர்ந்த ரேணுகா, அஞ்சலி, திருச்சியைச் சேர்ந்த கவிதா, மேனகா, வினோதா, லோசினி ஆகியோரும், ஆண்கள் பிரிவில் தஞ்சாவூர் சரவணன், திருச்சி பேட்டைவாய்த்தலை குணால், தஞ்சாவூர் முத்துகிருஷ்ணன், பேட்டைவாய்த்தலை ரவிவர்மா, சென்னக்கரை விஸ்வநாதன், தொட்டி யம் மோகன் ஆகியோரும் முறையே முதல் 6 இடங்களைப் பிடித்தனர்.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள், வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்