திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை யில் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை பறக்கும் சாலை அமைக்க வலியு றுத்தி, நாளை(பிப்.16) கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் வீ.கோவிந்த ராஜூலு வெளியிட்ட அறிக்கை:
திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ் சாலையில் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சாலை விரிவாக்கத் துக்காக ஆயிரக்கணக்கான கட்டிடங் களை அப்புறப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால், இந்தப் பகுதி வணிகர்கள் உட்பட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே, இந்தக் கட்டிடங்களுக்கு பாதிப்பில்லாதவாறு பறக்கும் சாலை (உயர்மட்ட சாலை) அமைக்கக் கோரி பிப்.9-ம் தேதி ஆட்சியரிடம் மனு அளித்து, ஒரு வாரத்தில் சாதகமான பதில் வேண்டும் என்று கோரியி ருந்தோம்.
ஆனால், இதுவரை பதில் வராததால், திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளால் பாதிக்கப்படுவோர் கூட்டமைப்பு சார்பில் நாளை (பிப்.16) பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சாலையின் இருபுறமும் உள்ள வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்புகள் ஆகியவற்றில் கருப்புக் கொடி ஏற்றப் படவுள்ளது. அதன்பிறகும் அரசு நடவடிக்கை எடுக்காவிடில், பிப்.23-ம் தேதி கடையடைப்பு மற்றும் உண்ணா விரத போராட்டம் நடத்தப்படும். அதன் பிறகும் தீர்வு கிடைக்காவிட்டால் தேர் தல் புறக்கணிப்பு உட்பட பல்வேறு போராட்டங்கள் தீவிரமாக முன்னெடுக் கப்படும் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago