தென்காசி- திருநெல்வேலி நான்குவழிச் சாலை பணியை விரைவில் தொடங்க வேண்டும் சிஐடியு பேரவைக் கூட்டத்தில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

தென்காசியில் சிஐடியு மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் மணிகண்டன், மகாவிஷ்ணு, ஆரியமுல்லை, லெட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். அயுப்கான் வரவேற்றார். சிஐடியு மாநிலச் செயலாளர் ரசல் தொடக்கவுரையாற்றினார்.

விவசாய சங்க மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாநிலச் செயலாளர் மோகன், மாநில பொதுச் செயலாளர் சுகுமாறன் உட்பட பலர் கலந்துகொண்டனர். லெனின்குமார் நன்றி கூறினார்.

கூட்டத்தில், ‘தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தென்காசி மின் வட்டம் தொடங்க வேண்டும். தென்காசி மாவட்டத்துக்கு நலவாரிய அலுவலகம் தொடங்க வேண்டும். தென்காசியில் இருந்து கோவை, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு புதிய ரயில்கள் இயக்க வேண்டும். தென்காசி-திருநெல்வேலி நான்குவழிச் சாலை பணியை விரைவில் தொடங்க வேண்டும். புதிய வேளாண் சட்டங்கள், மின் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

இஎஸ்ஐ மருத்துவமனையை விரிவுபடுத்த வேண்டும். தென்காசி யில் மருத்துவக் கல்லூரி, கலைக் கல்லூரி தொடங்க வேண்டும். கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்’ உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்