வேலூரில் பளுதூக்கும் தகுதி போட்டி ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் சார்பில், மாநில அளவிலான பளுதூக்கும் போட்டிக் கான வீரர்கள் தேர்வு செய்யும் தகுதிப்போட்டிகள் வேலூர் பளு தூக்கும் பயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாவட்ட விளை யாட்டு அலுவலர் (பொறுப்பு) நொயிலின்ஜான் வரவேற்றார். தமிழ்நாடு மாநில பளுதூக்கும் சங்கத்தின் பொதுச் செயலாளர் சண்முகவேல் முன்னிலை வகித்தார். வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமை வகித்து, தேர்வுப் போட்டியை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசும்போது, "இந்திய சுதந்திரப் போராட்டத் துக்கு வித்திட்டது வேலூர் மாவட்டம். இம்மாவட்டத்தில் 35 ஆயிரம் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களும், 25 ஆயிரம் ராணுவ வீரர்களும் உள்ளனர். தி.மலையில் நடை பெற்று வரும் இந்திய ராணுவத் துக்கு ஆள் சேர்ப்பு முகாமில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வர்களே அதிகமாக பங்கேற்று வரு கின்றனர் என்பது சிறப்புக் குரியதாகும்.

மாநில, தேசிய அளவில் நடை பெறும் பளு தூக்கும்போட்டிகளில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வர்களே அதிக அளவில் பதக்கங் களை பெற்று இம்மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர். விளையாட்டு வீரர்கள் தங்களது விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்ததமிழக அரசு பல்வேறு ஊக்கத் தொகைகளை வழங்கி வருகிறது.

குறிப்பாக, அரசுப்பணியில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் விளை யாட்டு வீரர்களுக்கு அரசின் உதவித்தொகை உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் விரைவாக செயல்படுத்தப் படுகிறது. காட்பாடி பகுதியில் 16 ஏக்கர் பரப்பளவில் ரூ.20 கோடி மதிப்பில் விளையாட்டு மைதானம் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் திறப்பு விழாவும் நடை பெறவுள்ளது.

விளையாட்டில் ஆர்வமுள்ள வேலூர் மாவட்ட வீரர்களுக்கு இந்த விளையாட்டு மைதானம் பெரும் உதவியாக இருக்கும். குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் தங்களது விளையாட்டு திறமைகளை மேம்படுத்திக்கொள்ள பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. எனவே, விளையாட்டில் ஆர்வ முள்ள மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டு அரசுப்பணியில் சேர்ந்து பயன்பெற வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்