வேலூர் அடுத்த பென்னாத்தூர் மற்றும் மேல்வல்லத்தில் நடந்த எருது விடும் விழாவில் 27-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வேலூர் மாவட்டம் பென்னாத் தூரில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. இதில், வேலூர், அணைக்கட்டு, பென்னாத்தூர், மூஞ்சூர்பட்டு, நெல்வாய் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார்120-க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன. வேலூர், தி.மலை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு எருது விடும் விழாவை கண்டுகளித்தனர்.
மருத்துவக் குழுவினர், காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் வருவாய்த்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். காளைகள் ஓடும் வீதியின் இருபுறமும் தடுப்பு கள் அமைக்கப்பட்டிருந்தன. எருது விடும் விழா முழுவதும் வீடியோவால் பதிவு செய்யப்பட்டது.
குறிப்பிட்ட இலக்கை நோக்கி எருதுகள் ஓடின. இருபுறமும் நின்றிருந்த பொதுமக்கள் காளைகளை உற்சாகப்படுத்தி, பின் தொடர்ந்து ஓடி அதன்மீது கைகளை வைத்து, ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். இதில், தறிக்கெட்டு ஓடிய எருதுகள் முட்டியதால் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதேபோல, வேலூர் அடுத்த மேல்வல்லம் கிராமத்தில் எருது விடும் திருவிழா நேற்று நடை பெற்றது. இதில், வேலூர், அணைக் கட்டு, பாகாயம், ஊசூர், அரியூர், ஜி.ஆர்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன.
காலை 9.30 மணிக்கு தொடங்கிய விழா நண்பகல் 1.30 மணியள வில் முடிவடைந்தது. குறிப்பிட்ட இலக்கை நோக்கி காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிய காளைகளின் உரிமையாளர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. எருதுகள் முட்டியதில் 7 பேர் காய மடைந்தனர்.காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago