விபத்தின் போது அளிக்க வேண்டிய முதலுதவி விழிப்புணர்வு

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், 32-வது சாலை பாதுகாப்பு மாத விழாவினையொட்டி, வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் இணைந்து, விபத்துக்குள்ளானவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவி குறித்தும், பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.

மோட்டார் வாகன ஆய்வாளர் கள் மாணிக்கம், அன்புச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் ராமன், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பங்கேற்று செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் அலுவலக பணிக்கு வந்த நபர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்