உயிரை பறிக்கும் அபாயத்தில் மதுரை மாட்டுத்தாவணி சாலை தினந்தோறும் திண்டாடும் வாகன ஓட்டுநர்கள்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் செல்லும் சாலை சேதமடைந்து பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு அடுத்து மிகப் பெரிய பஸ்நிலையமாக மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் உள்ளது. இந்த பஸ்நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், பெரி யார், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளுக்கும் 24 மணிநேரமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பஸ்நிலையம் அமைந்துள்ள சாலையில் பூ மார்க்கெட், ஒருங் கிணைந்த சென்ட்ரல் காய்கறி மார்க்கெட், முக்கிய அரசு அலு வலகங்கள் அமைந்துள்ளன.போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை கடந்த 6 மாதங்களாக முறையாக பராமரிக்கப்படவில்லை. சாலை யின் பல இடங்கள் குண்டும் குழியுமாக உள்ளன. குறிப்பாக கே.கே.நகர் மாநகராட்சி ஆர்ச் ரவுண்டானா முதல் மாட்டுத்தாவணி பஸ்நிலையம் வரை இந்த சாலை மிக மோசமாக உள்ளது. பூ மார்க்கெட் எதிரே, மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகே உள்ளிட்ட 3 இடங்களில் ஒரு அடி ஆழத்துக்கு சாலையின் நடுவில் பள்ளங்கள் உள்ளன. இந்த பள்ளங்களை மூடுவதற்கும், சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கும் நெடுஞ்சாலைத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வாகனங்கள் அதிக அளவில் செல்லும் இந்த சாலையில் ஒரு வாகனம் பள்ளத்தில் சிக்கி கீழே விழும்போது, அடுத்தடுத்து வரும் வாகனங்களும் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. சாலையின் நடுவில் பல இடங்களில் ஒரு சைக்கிள் டயர் இறங்கும் அளவுக்கு கோடுபோன்ற பள்ளங்கள் உள்ளன. இந்த பள்ளத்தில் இறங்கும் இரு சக்கர வாகனங்கள், அதிலிருந்து மீள முடியாமல் தடுமாறி மற்ற வாகனங்கள் மீது மோதி விபத் துக்குள்ளாகின்றன.

வாகன ஓட்டுநர்கள் ஹெல்மெட், முகக்கவசம் அணிந்துள்ளனரா என்பதை கண்காணித்து, விதி மீறலில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிக்கும் போக்கு வரத்து போலீஸார், விபத்துக்கு காரணமாக சாலை பள்ளங்களை சரிசெய்வது தொடர்பாக நெடுஞ் சாலைத் துறையின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர் பார்ப்பாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்